62

உத்தமர்களின் மனம் பிறர் அடையும் நன்மைகளை அறிந்து இயற்கையாகவே
மகிழ்ச்சி அடையும்இயல்பினது. (II. 4.26, 27)

கம்ப ராமாயணம்

     தசரதன் வசிட்டன் மூலம் அரசர்களுக்கு ஓலை அனுப்பக்
கட்டளையிடுகிறான்.

துளசி ராமாயணம்

     அரசர்களுக்கு ஓலை போக்கியதாகச் செய்தியே இல்லை.  இராம
பட்டாபிஷேகத்தைக்கேள்வியுள்ள மக்கள் பேருவகையுடன் அதற்கான
காரியங்களைச் செய்யத் தொடங்கினர் என்று மட்டும்கூறுகிறது.  (II. 8).

பிரகாஷ் ராமாயணம்

     எல்லா நாட்டு அரசர்களுக்கும் ஏழு தீவுகளுக்கும் இராம
பட்டாபிஷேகச் செய்தி தசரதன் ஆணையால்அறிவிக்கப்படுகிறது. 
பரதனையும் சத்துருக்கனனையும் அழைத்து வருமாறு தசரதன்
கட்டளையிடுகிறான்.7(பக். 19, 21)

தொகுப்புரை

     இராமனுக்கு முடிசூட்ட எண்ணிய தசரதன் வேற்றரசர்கட்கு ஓலை
அனுப்பும்போது  சனகனுக்கும் கேகயஅரசனுக்கும் அனுப்பவில்லை.  முடி
சூட்டு விழா அடுத்த நாளே நடக்க இருப்பதால்  நெடுந்தொலைவில்உள்ள
அவர்கள் வர இயலாது என்பது காரணமாக வான்மீகத்தில் கூறப்படுகிறது. 
பரதன் முடிசூட்டுவிழாவின் போது இல்லையே என்ற சிந்தனையும்
தசரதனுக்கு ஏற்படுகிறது.  எனினும்,  பண்பின் சிகரமாகியபரதன் இதனைத்
தவறாக எடுத்துக் கொள்ள மாட்டான் என்று தசரதன் இராமனிடம்
சொல்லுவதாகவும்வான்மீகம் குறிப்பிடுகிறது.

     கம்ப ராமாயணம் இது பற்றி விதந்து எதுவும் கூறவில்லை. அரசர்கட்கு
மன்னன் ஆணையால் ஓலைபோக்கினர் என்று மட்டுமே காணப்படுகிறது. 
கம்பன் காட்டும் தசரதன் பரதன் இல்லாமை குறித்துஎதுவும் கூறவில்லை.
மொத்தத்தில் கம்பன் இந்தச் சிக்கலில் மௌனம் சாதிப்பதாகத் தெரிகிறது.


7.    ஓங்கார கைலை, கஸ்மீர் மற்றும் ஹின்தி ராமகதை காவ்யத்தின்
     துல்னாத்மக் அத்யாயம்,பிரதி 7