துளசி தாசரும் அரசர்க்குச் செய்தி அனுப்புவது குறித்து எதுவும் பேசவில்லை. நகர மக்கள்இராமன் முடி சூடப்போவது அறிந்து பெரிதும் மகிழ்ந்தனர் என்று மட்டும் பொதுப்படையாகக்கூறுகிறார். இராமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டுவதென்பது ஒரு சாதாரணமான, புறக்கணிக்கக் கூடிய செய்தியன்று.இவ்வளவு இன்றியமையாத செய்தியினை வேற்றரசர்க்கு அறிவிக்கக் கட்டளையிட்ட தசரதன், தொலைவுஎன்ற ஒரே காரணத்தால் விழா நாயகனான இராமனின் மாமனாராகிய சனகனுக்கும் தன்னுடைய மாமனாரும், தனக்கு மிகவும் பிரியமானவளாகிய கைகேயியின் தந்தையாரும் ஆகிய கேகய அரசனுக்கும் அறிவிக்காமல்விட்டது ஏற்றுக் கொள்ளக்கூடிய சமாதானமாகத் தோன்றவில்லை. மேலும், தன் அன்பிற்கும் நம்பிக்கைக்கும்உரிய பரதன் கலந்துகொள்ள இயலாத நிலையை உணர்ந்தும் தொலைவில் இருப்பதால் அவனைத் தருவிக்கஇயலவில்லை என்பதும் பொருத்தமாகப் படவில்லை. சோதிடர்களால் குறிக்கப்பட்ட அந்த நாளிலேயே பட்டாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதால் இந்த நிலை ஏற்பட்டது என்பதைக் காப்பியம் காட்டுகிறது.வரவேண்டியவர்களின் தகுதியும் இன்றியமையாமையும் கருதித் தசரதன் வேறோர் நாளைக் குறிக்கச் சொல்லியிருக்கலாம். அப்படியிருந்தும் சோதிடர்கள் சொன்ன நாளில் பட்டாபிஷேகம் நடக்கவேயில்லை; இராமன் காடு செல்வதுதான் நடக்கிறது என்பதையும் காப்பியம் காட்டுகிறது. தசரதனின் ஆளுமையில்காணப்படும் இக்குறை நிலைத்துவிடுகிறது. கம்பன் இந்தச் சிக்கலைப் புலப்படுத்தாமலே விட்டது ஏன் என்று தெரியவில்லை. துளசிதாசர் இதைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டாரோ எனத் தோன்றுகிறது. ஏனெனில், தசரதன் பட்டாபிஷேகத்திற்குரிய நாளைக் குறிக்குமாறு கேட்டபோது, வசிட்டன் எந்த ஒரு நாளையும்குறிப்பிட்டுச் சொல்லாமல், இராமன் என்று பட்டாபிஷேகம் செய்து கொள்ளுகிறானோ அந்த நாள்தான்நல்ல நாள் என்று கூறுகிறான். எனவே, தசரதன் செய்கை பற்றிய வான்மீகக் கருத்தைத் துளசிதாசர்உடன்படவில்லை என்று தெரிகிறது. காஷ்மீர மொழியில் தோன்றிய பிரகாஷ் ராமாயணம் சனகன், கேகயன் உட்பட எல்லாஅரசர்கட்கும் ஓலை அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது. பரதனையும் சத்துருக்கனனையும் அழைத்து வருமாறும்தரசதன் ஆள் அனுப்புகிறான் எனவும் கூறுகிறது. இங்கே தசரதன் மீது குற்றம் வராதவாறு காக்கக் கவிஞர்முயன்றுள்ளார்; எனினும், சிக்கல் இதனால் தீரவில்லை. அதாவது, பட்டாபிஷேகத் |