சுமந்திரனோடு அரசனிடம் சென்ற இராமன் தசரதன் பெரும் பீதியுடையவனாய் மயங்கிக் கிடக்கவும்கோபமுற்ற நிலையில் கைகேயி அருகிருக்கவும் கண்டு அவளிடம் தந்தையின் நிலைக்குக் காரணம் கேட்டான். அரசன் முன்பு எனக்களித்த வரங்களை நான் இப்போது கேட்டதால் சினமுற்றவனாய் உன்மீதுள்ள பற்றால்உள்ளம் நொந்திருக்கிறான். நான் கூறுவதுபோல் நடந்தால் அவன் தெளிவுற்று முன்னைய உணர்வுக்குத் திரும்புவான் என்று கூறித் தான் பெற்ற வரங்களையும் கூறினாள் (II. 39, 40). அந்நிலையில்உணர்வு திரும்பி விழித்துப் பார்த்த தசரதனை நோக்கித், "தந்தையே, ஒரு சிறு விஷயத்திற்காகத்தாங்கள் மிகவும் மனம் தளர்ந்துவிட்டீர்கள். எனக்கு இதுபற்றி முன்னமே எவரும் சொல்லவில்லை.இங்கு வந்ததும், தாயார் கைகேயி கூறியதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தாங்கள் வருந்த வேண்டாம்; மகிழ்ச்சியுடன் ஆணையிடுங்கள்" என்றான் இராமன் (II 45). இவ்வாறு கைகேயியின் வரங்களைப் பற்றி அறிந்த இராமனைச் சித்திரித்த துளசிதாசர்இராமன் அந்நிலையில் அடைந்த மனமகிழ்ச்சியைக் கீழ்வருமாறு வருணிக்கிறார். தசரதனுக்குத் தைரியமூட்டும் வார்த்தைகளை மேற்கண்டவாறு கூறியபோது இராமனின் உடல்முழுதும்மகிழ்ச்சியால் புல்லரித்து நின்றது. அவன் பெற்ற மகிழ்ச்சி முன்னையினும் நான்கு மடங்காகப்பெருகியது.(II.51.8). அரசபாரம் என்னும் அருங்கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த ஓர் இளைய யானை, வனவாசம் என்னும் அருளால் விடுவிக்கப்பட்டவுடன் எல்லையற்ற மகிழ்ச்சியில் துள்ளித்திளைப்பதைப் போல் இராமனின் உள்ளம் கைகேயியின் கட்டளையால் ஏற்பட்ட மகிழ்ச்சி வெள்ளத்தில்ஊறித் திளைத்தது. (II.51) தசரத ஜாதகத்தின்படி தசரதன் கைகேயிக்கு ஒருவரம் தருகிறான். தன் மகன் பரதனுக்குஏழாண்டுகள் நிரம்பியதும் கைகேயி அவனை அரசனாக்குமாறு தசரதனைக் கேட்கிறாள். தசரதன் அவள்வேண்டுகோளை மறுத்துவிடுகிறான் அவள் மீண்டும் வற்புறுத்தவே தன்னிரு மூத்த புதல்வர்களான இராமனையும் இலக்குவனையும் வேறு நாட்டுக்காவது காட்டுக்காவது போய்விடுமாறும் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் இறந்த பின்னர்த் திரும்பி வருமாறும் கூறுகிறான். இராமனும் இலக்குவனும் அரசன் கட்டளைப்படி நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இந்நிகழ்ச்சியால் இராமனின் மனம் வருந்தவுமில்லை; மகிழவுமில்லை; அவனுள்ளத்தே எந்தச் சலனமும் தோன்றவில்லை.37
37. Shankar Raju Naidu Kamba Ramayana and Tulasi Ramayan P. 17. |