314. | மானை நாடுதல் புரிஞர் - 'வாலி ஏவலின் வருதல் ஆனவாறு' என மறுகி, ஆவி சோர் நிலையர், தொடர் ஏனைவானரர் சிலரும் ஏக, மா முழையில், முழு ஞான நாதரை, அறிவின் நாடி, மாருதி மொழியும்: |
மான் - மான்போல்வாளாகிய சீதை; நாடுதல் புரிஞர் - தேடுதலாகிய பணியைச் செய்வோர். 2-3 |