321. | 'இவன், உலைந்து உலைந்து, எழு கடல் புறத்து அவனியும் கடந்து, எயில் அடைந்தனன்; கவனம் ஒன்று இலான், கால் கடாயென, அவனி வேலை ஏழ், அரியின் வாவினான். |
உலைந்து - தோற்று; எயில் - மதில் (இங்கே புற அண்டத்து எல்லையிலுள்ள மதில்); கவனம் - கலக்கம்; கால் - காற்று; வாவினான் - தாவினான். 64-1 |