325.'திறத்து மா மறை அயனொடு
     ஐம்முகன், பிறர், தேடிப்
புறத்து அகத்து உணர் அரிய
      தன் பொலன் அடிக் கமலம்
உறச் சிவப்ப இத் தரைமிசை
      உறல், அறம் ஆக்கல்,
மறத்தை வீட்டுதல், அன்றியே,
      பிறிது மற்று உண்டோ?'

     ஐம்முகன் - சிவபிரான்.                                70-1