327.'மண்ணுள் ஓர் அரா முதுகிடை
      முளைத்த மா மரங்கள்
எண்ணில் ஏழ் உள; அவற்றில்
      ஒன்று உருவ எய்திடுவோன்,
விண்ணுள் வாலிதன் ஆர் உயிர்
      விடுக்கும்' என்ற உலகின்-
மண் உளோர்கள்தாம் கழறிடும்
      கட்டுரை உளதால்.

     அரா - பாம்பு (ஏழு மராமரங்களில் ஒன்றைத் தன் கணையால்
துளைப்பவனால் வாலி இறப்பான் என்று உலகில் ஒரு பேச்சு உண்டு என்கிறது
செய்யுள்).