334. | வெற்றி வீரனது அடு கணை, அவன் மிடல் உரத்தூடு உற்றது; அப்புறத்து உறாதமுன், உறு வலிக் கரத்தால் பற்றி, வாலினும் காலினும் பிணித்து, அகப்படுத்தான்; கொற்ற வெங் கொடு மறலியும், சிரதலம் குலைந்தான். |
மிடல் உரம் - வலிமையான மார்பு; உறு வலி - மிகுந்த வலிமை. 66-1 |