8.  அரசியற் படலம்

338.வள்ளலும், அவண் நின்று ஏகி,
      மதங்கனது இருக்கை ஆன
வெள்ள வான் குடுமிக் குன்றத்து
      ஒருசிறை மேவி, மெய்ம்மை
அள்ளுறு காதல் தம்பி,
      அன்பினால் அமைக்கப்பட்ட
எள்ளல் இல் சாலை எய்தி,
      இனிதினின் இருந்த காலை,

     வெள்ள வான் குடுமி - நீர்வளம் மிகுந்ததும் உயர்ந்ததுமான சிகரம்;
ஒரு சிறை - ஒருபக்கம்