10. கிட்கிந்தைப் படலம்

339.சென்று மாருதிதன்னிடம் சேர்ந்து, அவண்
நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும்,
வென்றி வீரன் வியப்பொடு மேல்வினை
ஒன்றுவான் அவன்தன்னை உசாவினான்.

     வென்றி வீரன் - வெற்றி கொள்ளும் வீரன்; இங்கே (அனுமன்); மேல்
வினை -
இனிமேல் செய்ய வேண்டிய செயல்கள்; அவன் தன்னை -
அவனை (அங்கதனை).                                        25-1