345. இன்னது ஆகிய திறத்து அவர்
      இருக்க, முன் போகச்
சொன்ன ஆயிர கோடியில்
     தூதம் தம் திறத்தால்,
பன்ன ஆறு - இரு வெள்ளம் ஆம்
      கவிப் படை பயில, -
பொன்னின் வார் கழல் இடபன் -
      அக் கிட்கிந்தை புகுந்தான்.

     அவர் இருக்க - இராம இலக்குவர்கள் காத்திருக்க; ஆறு இரு
வெள்ளம் -
பன்னிரண்டு வெள்ளம்; கவிப் படை - குரங்குப் படை. 1-2