347. | கங்கைசூடிதன் கருணை பெற்றுடைய முன் வாலி பொங்கும் ஆணையின் எண்திசைப் பொருப்பினும் பொலியத் தங்கி வாழ் கவித் தானை அங்கு ஆறு-ஐந்து கோடி வங்க வேலையின் பரந்திட, - வசந்தன் - வந்து அடைந்தான். |
கங்கை சூடி - சிவபெருமான்; வங்க வேலை - கப்பல்கள் இயங்கும் கடல். 1-4 |