12.  நாட விட்ட படலம்

351.சாரும் வீரர் சதவலி தம்மொடும்
கூரும் வீரர்கள் யாவரும் கூடியே,
நீரும் நும் பெருஞ் சேனையும் நின்றிடாப்
பேரும், பேதையைத் தேடுறும் பெற்றியால்.

     சதவலி சாரும் வீரர் தம்மொடும் - சதவலி என்ற தலைவனைச்
சார்ந்துள்ள வீரர்களோடும்; கூரும் - (வலிமையால்) மிகும்.            9-1