13.  பிலம் புக்கு நீங்கு படலம்

355.'இந் நெடுங் கிரிகொலோ, எதுகொலோ?' என
அந் நெடு மேருவோடு அயிர்க்கலாவது;
தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய
பொன் நெடு முடி எனப் பொலியும் பொற்பது;

     அயிர்க்கலாவது - ஐயப்படுதற்கு உரியது; அயிர்த்தல் - சந்தேகித்தல்.
                                                           12-1