357. | மாதுஅவள் உயிர்த்த மகவோர் இருவர்; வாசப் போது உறை நறைக் குழல் ஒருத்தி; - புகழ் மேலோய்! - ஏதம் உறு மைந்தர் தவம் எய்த அயல் போனார்; சீதள முலைச் சிறுமி தாதையொடு சென்றாள். |
மாது - சுயம்பிரபையுடன் இருந்த தேவ மாது; போது - விரியும் பக்குவத்திலுள்ள பூ; நறைக் குழல் - மணமுள்ள கூந்தல். 61-1 |