358. மத்த நெடு மா களிறு
     வைத்த குலிசி வன் தாள்
சித்தமொடு மான்முகன் வணங்கி,
      அயல் சென்றான்;
வித்தகனும், ஆயிர
      விலோசனனும், மேன்மேல்,
முத்த நகையாளை நனி
     நோக்கினன், முனிந்தான்.

     களிறு - யானை (இங்கே இந்திரனின் ஐராவதம்); குலிசி -
வச்சிராயுதமுடைய இந்திரன்; ஆயிர விலோசனன் - இந்திரன்.       61-2