14.  ஆறு செல் படலம்

361.இருவரும் கதம் எய்தி அங்கையில்
செரு மலைந்திடும் பொழுது, திண் திறல்
நிருதன் வெஞ்சினம் கதுவ, நின்றது ஓர்
பரு மராமரம் பறித்து வீசினான்.

     இருவரும் - அங்கதனும் அசுரனும்; நிருதன் - அசுரன்; கதுவ -
சேர்ந்திட                                                   7-1