375. | காமத்தால் நலியப்பட்டு, கனங்குழைதன்னைக் கொண்டு போம்மத்தா! போகல்; எந்தை புன் பசிக்கு அமைந்தாய்'' என்று, தாமத் தார் மௌலி மைந்தன் தடுத்து இடை விலக்க, நீசன் நாமத்தால் விரலைக் கவ்வ, நாணி மீண்டு, எனக்குச் சொன்னான்.' |
மத்தா - உன்மத்தனே; போகல் - போகாதே; நாமத்தால் - அச்சத்தால் 58-2 |