379. ஆயவன் அங்குப் போகிய
     பின்னர், அகமீதே
நோய் உறு தன்மைத்து
      ஆகிய வீரர்தமை நோக்கி,
தூய மனத்தன் ஆகிய
      வாலி தரு தொன்மைச்
சேயும் அவர்க்கே செப்பினன்,
     நாடும் செயல் ஓர்வான்.

     சேய் - மகன் (இங்கே அங்கதன்) (இப் படலத்தின் முதற் பாடலாக ஓர்
ஏட்டில் 'புள்ளரசு' எனத் தொடங்கும் பாடலும், பிறிதோர் ஏட்டில் 'ஆயவன்'
எனத் தொடங்கும் பாடலும் காணப்பட்டது.)