3939.மருண்ட மாமலைத் தடங்கள் செல்லல்
      ஆவ அல்ல - மால்
தெருண்டிலாத மத்த யானை
     சீறி நின்று சிந்தலால்,
இருண்ட காழ் அகில், தடத்தொடு
      இற்று வீழ்ந்த சந்த வந்த
ஒழுக்கு பேர் இழுக்கினே!

     மால் தெருண்டிலாத - மயக்கம் தெளியாத; மத்த யானை - மதம்
பொருந்திய யானைகள்; சீறி நின்று சிந்தலால் - சினங்கொண்டு நின்று
தாக்கியதால்; இருண்ட காழ் அகில் தடத்தோடு - இருள் நிறம் கொண்ட
வயிரம் பற்றிய அகில் கட்டைகளோடு; இற்று வீழ்ந்த சந்து - ஒடிந்து
விழுந்த சந்தன மரங்கள்; வந்து உருண்டபோது - (மேலிருந்து) உருண்டு
வந்த விழுந்த போது; அழிந்த தேன்- சிதைந்த தேன்; ஒழுக்கு பேர்
இழுக்கின்
- ஒழுகுதலினால் ஏற்பட்ட மிக்க வழுக்கலினால்; மருண்ட
மாமலைத் தடங்கள் -
யாவர்க்கும் மருட்சியை உண்டாக்கும் பெரிய
அம்மலைகளின் வழிகள்; செல்லல் ஆவ அல்ல - எளிதில் கடந்து செல்லக்
கூடியன அல்ல.

     பலர்க்கும் அச்சத்தை விளைவிக்கும் மலையாதலின் 'மருண்ட மாமலை'
எனப்பட்டது.  'குறவரும் மருளும் குன்றம்' என்பது மலைபடுகடாம். (275).
யானையின் சீற்றம் வழிச்செல்வார்க்குப் பாதையை அரிதாக்கிவிடுகிறது
என்றாலும், அம்மலைப்பகுதியிலுள்ள அகில், சந்தனம், தேன் என்ற வளமே
உணர்த்தப்படுகிறது.  யானைகள் சீற்றம் கொள்வதால் மரங்கள் முறிந்து
விழுந்தன; மரங்கள் விழுவதால் தேன் கூடுகள் சிதைந்தன; அவை
சிதைந்ததால் தேன் ஒழுகி வழிகள் வழுக்கல் உடையனஆயின.          5