4275. | ' ''இன்னும் நாடுதும், இங்கு இவர்க்கு வலி துன்னினாரை'' எனத் துணிந்தார்எனின், உன்னை வெல்ல, உலகு ஒரு மூன்றினும், நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய். |
இன்னும் இங்கு இவர்க்கும் - இனி வேறாக இப்போது இராம லக்குவராகிய இவர்களைக் காட்டிலும்; வலி துன்னினாரை நாடுதும் - வலிமையுள்ளவரை நாடித் துணையாகக் கொள்வோம்; எனத் துணிந் தார் எனின் - என்று (அச்சுக்கிரீவன் முதலோர்) முடிவெடுத்தார் களென்றால்; உன்னைவெல்ல - உன்னை வெல்வதற்கு; உலகு ஒரு மூன்றினும் - மூன்ற உலகங்களிலும்; நின் அலால் பிறர் இன்மை - உன்னையல்லாமல் வேறு யாரும் இல்லாமையை; நிகழ்த்துவாய் - அவர்களுக்கு (எடுத்துச்) சொல்வாய். பிறரால் வெல்ல முடியாத பேராற்றலோடு வேண்டுங்காலத்துத் தன்னைத் தானே அடக்கிக் கொள்ளும் வல்லமை மிக்கவன் இலக்குவன் என்பது, 'நின்ன லால் பிறரின்மை' எனவே உவமை நீக்கிய தோன்றல் இலக்குவன் என்பது. 7 |