4313.விலங்கி, மெல் இயல், வெண்
      நகை, வெள் வளை,
இலங்கு நுண் இடை, ஏந்து
      இள மென் முலை,
குலம் கோள் தோகை
      மகளிர் குழாத்தினால்,
வலம் கொள் வீதி
      நெடு வழி மாற்றினாள்.

     விலங்கி மெல்லியல் - குறுக்கிட்டு (அப்பால் செல்ல வொட்டாமல்
கட்டுப்படுத்துகின்ற) மென்மையான தன்மையையும்; வெண்நகை வெள்வளை
-
வெண் பற்களையும், வெள்ளைச் சங்கு வளையல்களை யும்; இலங்கு நுண்
இடை -
விளங்குகின்ற நுண்ணிய இடையையும்; ஏந்து இள மென்முலை -
உயர்ந்த இளமையான மெல்லிய முலை களையுமுடைய; குலம்கொள் - சிறந்த
குலத்தில் பிறந்த; தோகை மக ளிர் - மயில் போன்ற சாயலுள்ள பெண்களின்;
குழாத்தினால் -
கூட்டத்தைக் கொண்டு; வலம் கொள்வீதி - மேன்மையான
பெரிய அவ் வீதியின்; நெடுவழி மாற்றினாள் - வழியைத் (தாரை) தடுத்தாள்.

     தாரை தன் தோழியர் கூட்டத்தோடு சென்று இலக்குவன் வந்து
கொண்டிருந்த அவ் வீதியின் வழியைத் தடுத்தாள் என்பது.               45