4348. அறிவுற்று, மகளிர் வெள்ளம்
      அலமரும் அமலை நோக்கிப்
பிறிவு உற்ற மயக்கத்தால், முந்து
      உற்றது ஓர் பெற்றி ஒரான்,
'செறி பொன் - தார் அலங்கல்
      வீர! செய்திலம் குற்றம்
; நம்மைக்
கறுவுற்ற பொருளுக்கு என்னோ
      காரணம் கண்டது?' என்றான்.

     மகளிர் வெள்ளம் அழிவுற்று - (அங்கதன்) அங்கு வந்ததைப்
பெண்டிர் கூட்டம் அறிந்து; அலமரும் அமலை நோக்கி - கலங்கி ஆர
வாரம் இடுதலைக் கண்டு; பிறிவு உற்ற மயக்கத்தால் - தன் மயக்கத்தி
லிருந்து விடுதலையடைந்து; முந்து உற்றது ஓர் பெற்றி - முன்பு (அங்க தன்
வந்து எழுப்பியது போன்ற) நடந்த நிகழ்ச்சிகளின் தன்மையை; ஓரான் -
உணராதவனாய் (அங்கதன் கூறியதற்க விடையாக அவனை நோக்கி);
செறிபொன் தார் அலங்கல் வீர -
நிறைந்த பொன்மாலையும் மலர்
மாலையும் அணிந்த வீரனே!குற்றம் செய்திலம் - 'நாம் எந்தக் குற்றமும்
செய்யவில்லையே, (அவ்வாறு இருக்க); நம்மைக் கறுவுற்ற பொருளுக்கு -
நம் மீது இலக்குவன் சினம் கொண்டதற்கு; காரணம் கண்டது என்னோ -
காரணமாகக் காணப் பட்டது எது'; என்றான் - என்று கேட்டான்.

     அலமரம் - வருந்துதல் எனினும் அமையும் 'அலமரல் தெருமரம்
ஆயிரண்டும் சுழற்சி' - (தொல் - சொல் - 314).  அமலை - ஆரவாரம்.
கறுவுறல் - வெகுளல். வெள்ளம் - பேரெண்ணைக் குறிக்கும் (பெருந்திரள்). 80