அரியணையில் அமர்ந்திட இலக்குவன் இசையாமல்
கல்தரையில் இருத்தல்

4375. அரியணை அமைந்தது காட்டி, 'ஐய! ஈண்டு
இரு' எனக் கவிக் குலத்து அரசன் ஏவலும்,
'திருமகள் தலைமகன் புல்லில் சேர, எற்கு
உரியதோ இஃது?' என மனத்தின் உன்னுவான்,

     கவிக்குலத்து அரசன் - வானர குலத்து மன்னனாகிய சுக்கிரீவன்;
அமைந்தது அரியணை காட்டி -
நன்றாக அமைக்கப்பட்ட ஒரு
சிம்மாசனத்தை (இலக்குவனுக்குக்) காண்பித்து; ஐய - தலைவனே! ஈண்டு
இரு என -
இதில் அமர்வாயாக என்று; ஏவலும் - வேண்டவும்; திரு
மகள் தலைவன் புல்லில் சேர -
(இலக்குவன்) இலக்குமி தலைவனாகிய
இராமன் புல்தரையில் அமர்ந்திருக்க; இஃது எனக்கு உரியதோ - இந்தச்
சிம்மாசனத்தில் அமர்வது எனக்குப் பொருந்துமோ? என மனத்தின்
உன்னுவான் -
என மனத்தில் சிந்திப்பவனாய். . . .

     இலக்குமி கொழுநனான இராமன் புல்தரையில் இருக்கத் தான்மட்டும்
அரியணையில் அமர்வதா என்று கருதினான் இலக்குவன்.            107