4388. | ஒன்பதினாயிர கோடி யூகம், தன் முன் செல, பின் செல, மருங்கு மொய்ப்புற, மன் பெருங் கிளைஞரும் மருங்கு சுற்றுற, மின் பொரு பூணினான் செல்லும் வேலையில், |
ஒன்பதினாயிர கோடி யூகம் - ஒன்பதினாயிரங் கோடிக் குரக்குச் சேனைகள்; தன் முன்செல பின்செல மருங்க மொய்ப்புற - தனக்கு முன்னும் பின்னும் இருபக்கமும் நெருங்கி வரவும்; மன் பெருங் கிளைஞரும் - மிகச் சிறந்த உறவினர்களாகிய வானரங்களும்; மருங்கு சுற்றுற - அருகில் சூழ்ந்து வரவும்; மின் பொரு பூணினான் - மின்னல் போன்ற ஒளி விடுகின்ற அணிகளை அணிந்த சுக்கிரீவன்; செல்லும் வேலையில் - (இராமன் இருக்கும் இடத்திற்குப்) போகும் சமயத்தில். . . பின்செல மருங்கு மொய்ப்புற என்ற சொற்போக்கினால் சுக்கிரீவனுடன் சென்ற பெரும் பரிவாரத்தின் இயல்பு புலனாகும். மருங்கு - பக்கம், மேல் யூகம் - குரக்குப் படை. 120 |