4454. | 'வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய கள்ள வாள் அரக்கன் செலக் கண்டது, தெள்ளியோய்! ''அது தென் திசை என்பது ஓர் உள்ளமும் எனக்கு உண்டு'' என உன்னுவாய். |
தெள்ளியோய் - தெளிவான அறிவுள்ளவனே! வள்ளல் தேவியை - சிறந்த கொடியாளனான இராமனின் மனைவியாகிய சீதையை; வஞ்சித்து வௌவிய - வஞ்சனையால் கவர்ந்து சென்ற; கள்ள வாள் அரக்கன் - கள்ளத் தன்மையுடைய கொடிய அரக்கனான இராவணன்; செலக் கண்டது அது - போகக் கண்டதான அந்தத் திசை; தென்திசை என்பது - தெற்குத் திக்காகும் என்பதாகிய; ஓர் உள்ளமும் - ஒரு நினைவும்; எனக்கு உண்டு - என்னிடம் தோன்றுகிறது; என உன்னுவாய் - என்று நீ கருதுவாய். கண்டது - சீதை தன் கலன்களை ஒரு முடிப்பில் பொதிந்து எறிந்ததைக் கண்டது. 8 |