4466. ஆண்டு இறந்தபின், அந்தரத்து இந்துவைத்
தீண்டுகின்றது, செங் கதிர்ச் செல்வனும்
ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது -
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம்.

     ஆண்டு இறந்தபின் - அந்தப் பொழிலைக் கடந்த பின்பு; அந்தரத்து
இந்துவைத் தீண்டுகின்றது -
ஆகாயத்தில் மதியைத் தொடுவதும்; செங்
கதிர்ச் செல்வனும் -
சிவந்த கிரணங்களைச் செல்வமாக வுடைய சூரியனும்;
ஈண்டு உறைந்து அலது -
இம் மலையில் தங்காமல்; ஏகலம் என்பது -
அப்பால் செல்லமாட்டோம் என்று நினைத்தற்கு இடமானதுமாகிய;
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் -
பாண்டு மலை என்னும்
மலை(யுள்ளது) (அதைச் சென்றடையுங்கள்.)

     பாண்டுமலை மிகவுயர்ந்து மிக இனிமையான இடடாயிருத்தலால்
கதிரவனும் அங்கே தங்கி அப்பாற் செல்லக் கருதுகின்றான் என்பது.
பருப்பதம் - பர்வதம் என்ற வடசொல் திரிபு.                        20