4590.மா வடிவுடைக் கமல
     நான்முகன் வகுக்கும்
தூ வடிவுடைச் சுடர் கொள்
      விண் தலை தொளைக்கும்
மூஅடி குறித்து முறை
      ஈர் -
அடி முடித்தான்
பூ வடிவுடைப் பொரு
     இல் சேவடி புரைந்தான்.   *

     மா வடிவுடைக் கமல நான்முகன் - சிறந்த வடிவமுடைய (திருமா
லின்) நாபிக் கமலத்தில் உதித்த பிரமன்; வகுக்கும் - படைத்துள்ள; தூ
வடிவுடை -
தூய்மையான தோற்றமுடைய; சுடர் கொள் விண் - (சூரியன்
முதலிய) சுடர்களைத் தன்னிடம் கொண்ட ஆகாயத்தினது; தலை -
உச்சிமுகட்டை; தொளைக்கும் - துளைத்து ஊடுருவிச் சென்றதாகிய; மூ அடி
குறித்து முறை ஈர்அடி முடித்தான் -
(வாமனனாகி மகாபலியிடம்) மூன்றடி
மண் இரந்து பெற்று, உடனே முறையாக (வானம் பூமி என்ற இரண்டையும்)
தன் இரண்டடிகளால்  அளந்து நின்ற (திரிவிக்கிரமனான) திருமாலின்; பூ
வடிவுடை -
அழகிய வடிவையுடைய; பொருவு இல் சேவடி - ஒப்பற்ற
சிவந்த திருவடிகளை; புரைந்தான் - ஒத்து விளங்கினான்.

     இப்பாட்டில் திருமாலின் திரிவிக்கிரமாவதாரத்தை ஒப்பாகக் கூறினார்.
மாவலியிடம் மூவடி மண் வேண்டி ஈரடிகளால் மண்ணும் விண்ணும் அளந்த
வரலாறு இங்கே குறிக்கப்பட்டுள்ளது.  தூவடிவுடைச் சுடர்கொள்விண்:
நிர்மலமானதும், சூரிய சந்திரர்களான சுடர்கள் சஞ்சரிக்கப் பெற்றதுமான
ஆகாயம். புரைதல்: ஒத்தல். அனுமனுக்குத் 'திருவடி' என்ற பெயர்
உண்டாதலால் இங்கு வேறு வகையாகத் திருமாலின் சேவடி போன்றவன்
என்று நயம்படி உரைத்தார் என நயம் காண்பர்.                     70