தொண்டை நாட்டை அடைதல் 4631. | சூடி, ஆண்டு அச் சுரி சூழல் தோகையைத் தேடி, வார் புனல் தெண் திரைத் தொண்டை நல் நாடு நண்ணுகின்றார், மறை நாவலர் வேடம் மேயினர், வேண்டு உரு மேவுவார். |
வேண்டு உரு மேவுவார் - விரும்பிய வடிவங்களை எடுக்கும் திற மையுடைய வானரர்கள்; சூடி - (தவயோகிகளின் திருவடிகளைத் தம்) தலையில் சூடிய பின்பு; ஆண்டு - அத் திருவேங்கட மலையில்; அச் சுரிகுழல் தோகையை - சுருண்ட கூந்தலையுடைய மயில் போன்ற சீதையை; தேடி - அங்கே தேடிப் பார்த்து(க் காணாமல்); மறைநாவலர் வேடம் மேயினர் - வேதங்களில் வல்ல அந்தணர்களின் வேடத்தைப் பூண்டவர்களாய்; தெண் திரை - தெளிந்த அலைகளையுடைய; வார் புனல் - மிக்க நீர் நிறைந்த; தொண்டைநல் நாடு - சிறந்த தொண்டை நாட்டை; நண்ணுகின்றார் - சேர்பவரானார்கள். கரிகுழல் தோகை: அடையடுத்த இருமடியாகு பெயர். 'தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து' என்றவாறு மிகுந்து சான்றோரை மிகுதியாகக் கொண்ட நாடாதலால் 'வார் புனல் தெண்திரைத் தொண்டை நன்னாடு' என்றார். 38 |