ஏமகூடத்தில் பிரிந்த யாவரும் மயேந்திரத்தில் ஒன்று கூடுதல்

4649.'விரிந்து, நீர், எண்
      திசை மேவி, நாடினீர்,
பொருந்துதிர் மயேந்திரத்து'
     என்று போக்கிய
அருந் துணைக் கவிகள்
      ஆம் அளவு இல்சேனையும்
பெருந் திரைக் கடல்
      எனப் பெரிது கூடிற்றே.  *

     நீர் - நீங்கள்; விரிந்து - பரவி; எண்திசை மேவி - எட்டுத் திக்கு
களுக்கும் சென்று; நாடினீர் - (சீதையைத்) தேடியவர்களாய்; மயேந் திரத்துப்
பொருந்துதிர் -
மகேந்திர மலையில் (எங்களோடு) வந்து கூடுங்கள்; என்று -
என்று கூறி; போக்கிய - (அங்கதன் முதலோர்) முன்பு அனுப்பிய;
அருந்துணை -
அரிய துணையாக வந்த; கவிகள் ஆம் அளவு இல்
சேனையும் -
எண்ணிக்கையற்ற வானர சேனையும்; பெருந்திரைக் கடல்
என -
பெரிய அலைகளையுடைய மற்றொரு கட லைப் போல; பெரிதும்
கூடிற்று -
(அங்கதன் முதலான வானர வீரரிடம்) பெருங் கூட்டமாக வந்து
சேர்ந்தது.

     அனுமன் முதலிய வானரத் தலைவருடன் சுக்கிரீவனால்
அனுப்பப்பட்டவர் இரண்டு வெள்ளம் கொண்டு பெருஞ்சேனையர் என்பது.  2