4673.வள்ளியும் மரங்களும் மலையும்
      மண் உற,
தெள்ளு நுண் பொடிபட,
      கடிது செல்கின்றான்;
தள்ளு வன் கால்
      பொர, தரணியில் தவழ்
வெள்ளி அம் பெரு
      மலை பொருவு மேனியான்;

     வள்ளியும் - கொடிகளும்; மரங்களும் - பலவகையான மரங்களும்;
மலையும் -
மலைகளும்; மண் உற - மண்ணோடு மண்ணாகும் படி; தெள்ளு
நுண் பொடிபட -
தெள்ளிய நுண்மையான பொடியாகுமாறு; கடிது
செல்கின்றான் -
விரைவாகச்சென்றான்; தள்ளு வன்கால் பொர -
எல்லாவற்றையும் தாக்கித் தள்ளவல்ல வலிய காற்று மோதுவதால்; தரணியில்
தவழ் -
பூமியில் தவழ்ந்து வருகின்ற; வெள்ளி அம் பெருமலை - அழகிய
வெள்ளிமயமான கைலாய மலையை; பொருவும் மேனியான் - ஒத்த
உருவமுடையவனும் (ஆகி).

     சம்பாதி நடந்து வருகையில் வழியிலுள்ள கொடிகளும் மரங்களும்
மலைகளும் பொடியாயினவென அவனது வேகத்தையும் வலிமையையும்
கூறினார்.

     தரணியில் தவழ் வெள்ளியம் பெருமலை: இல்பொருளுவமை. சம்பாதிக்கு
வெள்ளிமலை உருவின் பெருமையாலும் நிறத்தாலும்உவமையாம்.         26