520.

இப்புறத்துஇராமனும், இரவி சேயினை
ஒப்புற நோக்கி,'வந்துற்ற தானையர்;
தப்பு அறக்கண்டனம் என்பரோ ? தகாது
அப்புறத்துஎன்பரோ ? அறைதியால் !' என்றான்.

     இராமன் சுக்ரீவனைப்பார்த்து வினாவுதல். இதுவரை மதுவன
நிகழ்ச்சிக்குப் பின் நடந்தவை கூறப்பெற்றன.                 (19-20)