386. | விண்ணோர்அது கண்டனர், உள்ளம் வியந்து மேல்மேல் கண் ஓடியநெஞ்சினர், காதல் கவற்றலாலே, எண்ணோடு இயைந்துதுணை ஆகும் இயக்கி ஆய பெண்ணோடு இறைஇன்னன பெற்றி உணர்த்தினாரால். |
தேவர்கள்,அனுமன் செல்வதைக் கண்டனர். சுரசையைப் பார்த்து கூறினர். கண் ஓடிய - இரக்கமுற்ற. (64-1) |