இத் திறம்அனந்த கோடி இராக்கதக் குழுவின் உள்ளார் தத்தம செய்கைஎல்லாம் தனித் தனி நோக்கி, தாங்காது, 'எத் திறம்இவர்தம் சீரை எண்ணுவது ?' எனவே, அண்ணல் உத்தமன்தேவிதன்னை ஒழிவு அற நாடிப் போனான்.
இராக்கதரை எண்ணல்அரிது என்ற அனுமன் நினைவு. (120-1)