மீட்டும்,அத் திரிசடை என்னும் மென் சொலாள், 'தோள் தடம்பொரு குழைத் தொண்டைத் தூய்மொழி கேட்டி; வெங் கடுஎனாக் கிளர் உற்பாதம்ஆய், நாட்டினை;யாவரும் நடுக்கம் காண்டுமால்.
தொண்டை -தொண்டைக்கனி போன்ற வாய். கடு - விடம். உற்பாதம் -துர்நிமித்தம். (53-1)