'வேகம் விண்டு சயந்தன் வணங்கி, விசும்பில் போக, அண்டர்கள் கண்டு, அலர் கொண்டு பொழிந்தார்; நாக நம்பன்இளங் கிளை நன்கு உணராத, பாகு தங்கியவென்றியின், இன் சொல் பணிப்பாய்.
இளம் கிளை -இலக்குவன். உணராத என்னாது 'நன்கு உணராத' என்ற சொல்லாட்சி கருதுக. இதனைப் 'பாகு தங்கிய வென்றி' என்றது தன்னால் மட்டுமே நுகர்ந்து இன்புறும் வெற்றியாதலின். தனக்காகத் தன் நாயகன் மேற்கொண்ட செயல் ஆதலின் சீதை நினைந்து இன்புறற்கு ஏதுலாயிற்று.(77-5)