அதுபொழுது, அவர் அது கண்டார்; அடு படை பலவும் எறிந்தார்; கதிகொடு சிலவர்தொடர்ந்தார்; கணை பலர் சிலைகள் பொழிந்தார்; குதிகொடு சிலவர்எழுந்தே குறுகினர்; கதைகொடு அறைந்தார்; மதியொடு சிலவர்வளைந்தார்; மழு, அயில், சிலவர் எறிந்தார்.
கதி - வேகச்செலவு. கதை - தண்டு. (24-1)