436.

அனுமனும்,அவர் விடு படையால், அவர் உடல்
                           குருதிகள் எழவே,
சின அனல் எழ,ஒரு திணி மா மரம்அதில் உடல்
                           சிதறிடவும்
தனுவொடு தலைதுகள்படவும், சர மழை பல
                          பொடிபடவும்
தினவு உறு புயம்ஒடிபடவும், திசைதிசை ஒரு தனி
                          திரிவான்.

     அவர் படையால் அவர்உடல் குருதி எழச் செய்தான்.     (24-2)