8. சம்பு மாலிவதைப் படலம்
அது கண்டுஅரக்கன் சினம் திருகி, ஆடற் பகழி அறுநூறு முதிரும் வயப்போர் மாருதிதன் புயத்தில் மூழ்க விடுவித்தான்; புதையுண்டு உருவிப்புறம் போக, புழுங்கி அனுமன் பொடி எழும்பக் குதிகொண்டு,அவன் தேர் விடும் பாகன் தலையில் சிதறக் குதித்தனனால்
அரக்கன் - சம்புமாலி.600 அம்புகளும் அனுமன் புயத்தில் புதைந்துஉருவிப் புறம் போயது. (45-1)