455. | 'மாய்ந்தான், மாருதி கையால், அகிலமும் உடையான்மகன்' என வானோர் கண்டு, ஓய்ந்தார்இலர்,குதி கொண்டார்; உவகையின் ஒழியா நறுமலர் சொரிகின்றார்; சாய்ந்தார்நிருதர்கள் உள்ளார் தமர் உடல் இடறித்திரைமிசை விழ ஓடித் தேய்ந்தார்சிலர்; சிலர் பிடரியில் குதியடி பட ஓடினர்;சிலர் செயல் அற்றார். |