.460.

"மைந்தனைமடித்தது குரங்கு" என்று ஓதவும்
வந்தது போலும்,நம் வாழ்வு நன்று !' எனா,
சிந்தையின்அழன்று, எரி விழித்து, 'சென்று, நீர்
இந்திரன்பகைஞனைக் கொணருவீர்' என்றான்.

     மைந்தன் -அக்ககுமாரன். இந்திரன் பகைஞன் - இந்திரசித்து.  (49-1)