ஆடு அரங்குகள் எரிந்தன; அரக்கியர் சிறுவ- ரோடு எரிந்தனர்; உலப்பில் பல் கொடிகளும் எரிந்த; தேடு அரும் மணிச்சிவிகையோடு அருந் திறல் அரக்கர் வீடு எரிந்தன;எரிந்திடாது இருந்தது என், வினவில் ?
சிவிகை - பல்லக்கு.உலப்பு இல் - வற்றுதலற்ற. (37-3)