கடவுள் வாழ்த்து அறுசீர் விருத்தம் 4740. | அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என, பூதம் ஐந்தும் விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் கலங்குவது எவரைக் கண்டால் ? அவர், என்பர்- கைவில் ஏந்தி, இலங்கையில் பொருதார்; அன்றே, மறைகளுக்கு இறுதி யாவார்! | மறைகளுக்குஇறுதியாவார்- வேதத்தின் எல்லை நிலமாக இருக்கின்ற ஞானிகள்; எவரைக் கண்டால் - எவரைத் தரிசித்த உடனே; விலங்கிய பூதம் ஐந்தும் - ஒன்றோடொன்று ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும்; வேறுபாடுஉற்ற வீக்கம் - வேறு வேறு விதமாக அமைந்த பன்மைத் தோற்றம்;அலங்கலில் தோன்றும் பொய்ம்மை - மாலையில் தோற்றமளித்த பொய்;அரவு என - பாம்பு போல; கலங்குவது - இல்லாது போதல் (நிகழுமோ):அவர் அன்றே - அவர் அல்லவா; கைவில் ஏந்தி - கரத்திலே கோதண்டத்தைத் தாங்கி; இலங்கையில் பொருதார் - இலங்கை மாநகரத்தில் போர் செய்தவர்; என்பர் - என்று கூறுவர். பொய்யான பாம்பு மெய்யான மாலையைக் கண்டு உண்மை தெரிந்தவுடன் மறையும். அதுபோலப் பொய்யான பிரபஞ்சம் மெய்யான பரம்பொருளைப் பார்த்ததும் மறையும். மெய்யுணர்ச்சி தோன்றியதும் பிரபஞ்சம் இறைவனாகவோ இறைவனின் மேனியாகவோ தோன்றும். உள்ளது - மாலை; உள்ளது - பரம்பொருள்; இல்லது - பாம்பு; இல்லது - பிரபஞ்சம். பிரபஞ்சத் தோற்றத்துக்கு ஆதாரமான பரம்பொருள் வில்லேந்தி வந்தது. ஐந்து பூதங்களும்தம்மிற் கலத்தலால் விகாரங்கள் உண்டாயின. கலத்தல்இது பஞ்சீகரணம் என்று பேசப்படும். ஈண்டுப் பூதம் என்றது கொன்று, காசில்கொற்றத்தைக் காட்டிய கிட்கிந்தா காண்டத்தைவிட, பெருமான் மணிமுடி சூடியதைக் கூறும் யுத்த காண்டத்தைவிட சுந்தரகாண்டம் எவ்வகையில் உயர்ந்தது என்னும் ஐயம் தோன்றுவது இயற்கையே. இவ் ஐயத்தைப் போக்க பலர் முயன்று பலவாறு கூறுகின்றனர். |