இனையகாலையில் மயனும் முன் அமைத்தற்கு இரட்டி புனைய, மாருதிநோக்கின், இன்னன புகல்வான்; 'வனையும் என்உருத் துவசம் நீ பெறுக' என, மகிழ்வோடு அனையன்நீங்கிட, அனலியும் மறுபடி உண்டான்.
மயன் - தெய்வத்தச்சன். மயனுக்கு மிகுதி கூறியதாகிய செய்திபுலப்படவில்லை. அனலி - தீ. (37-4)