காலைஊன்றி எழுந்தபோது நிகழ்ந்த மாறுதல்கள்

4755..

'இலங்கையின் அளவிற்று அன்றால்,
     "இவ்வுரு எடுத்த தோற்றம்;
விலங்கவும் உளதுஅன்று" என்று
     விண்ணவர்வியந்து நோக்க,
அலங்கல்தாழ்மார்பன் முன்தாழ்ந்து
    அடித்துணைஅழுத்தலோடும்,
பொலன்கெழுமலையும் தாளும்
    பூதலம்புக்க மாதோ !

     இவ்வுரு - (அனுமன்மேற்கொண்ட) இந்த வடிவத்தின்; எடுத்த
தோற்றம் -
பெருமிதமான உயர்ச்சி; இலங்கையின் அளவிற்றன்று -
இலங்கையை எல்லையாகக் கொண்டது அன்று; விலங்கவும் - (அனுமனைத்)
தடுத்து நிறுத்தவும்; உளது அன்று என்று - ஒரு பொருளும் இல்லையென்று;
விண்ணவர் -
தேவர்கள்; வியந்து நோக்க - ஆச்சரியப்பட்டுப் பார்க்க;
அலங்கல் தாழ்மார்பன் -
மாலைகள் தங்கிய மார்பை உடைய அனுமான்;
முன் தாழ்ந்து -
முன் புறமாக மேனியை வளைத்து; அடித்துணை அழுத்த
லோடும் -
இரண்டு திருவடிகளையும் ஊன்றியவுடன்; பொலன்கெழு
மலையும் தாளும்  -
பொன் மயமான மகேந்திர மலையும் அதன் அடிச்
சாரலும்; பூதலம் புக்க - பூமியின் அடித்தளத்தைச் சென்று சேர்ந்தன.

     அனுமன் கொண்டபேருரு இலங்கையை எல்லையாகக் கொண்டதன்று.
இவன் இலங்கையடைந்ததும் இவனைத் தடுத்து நிறுத்தும் பொருள் இல்லையே
என்று தேவர்கள் கருதினர். அளவு - எல்லை. தோற்றம் - உயர்ச்சி. நிலையில்
திரியாது அடங்கியான் தோற்றம் (குறல் 124) தாழ் - தங்கிய, மாலைதாழ்
வியன்மார்ப; (கலித்தொகை 33) தொங்குதல் என்றும் கூறலாம். தாள் -
அடிவாரம். இருள்கீள விரி தாள் கயிலாய மலையே (3-ஆம் திருமறை)  (15)