ஆயவன்எழுதலோடும் அரும்பணைமரங்கள் யாவும் வேய்உயர்குன்றும், வென்றி வேழமும்,பிறவும், எல்லாம் 'நாயகன் பணிஇது' என்னா, நளிர்கடல்இலங்கை தாமும் பாய்வன என்ன,வானம் படர்ந்தன,பழுவம் மான.
ஆயவன் - அந்த அனுமான்;எழுதலோடும் - மலையை விட்டு எழுந்தவுடன்; அரும்பணை மரங்கள் தாமும் - சிறந்த கிளையைப் பெற்ற மரங்களும்; வேய்உயர் குன்றும் - மூங்கில் வளர்ந்த மலைகளும்; வென்றி வேழமும் - வெற்றியையுடைய யானைகளும்; பிறவும் எல்லாம் - கூறப்பெறாத எல்லாப் பொருள்களும்; நாயகன் பணி இது என்னா - இராமபிரானுக்குச் செய்யும் தொண்டு இது என்று கருதி; நளிர்கடல் இலங்கை - குளிர்ந்த கடலால் சூழ்ந்த இலங்கை; தாமும் பாய்வன என்ன - தாங்களும்பாய்ந்து செல்வன என்று கூறும்படி; பழுவம் மான - சோலைபோல; வானம்படர்ந்த - வானத்திற் பரவிச் சென்றன; ஆயவன் - அத்தகையவன்(ஆய + அன்) (17)