4758.

இசையுடை அண்ணல் சென்ற
    வேகத்தால், எழுந்த குன்றும்,
பசையுடை மரனும்,மாவும்,
     பல்உயிர்க் குலமும், வல்லே
திசை உறச்சென்று சென்று,
     செறிகடல்இலங்கை சேரும்
விசை இலவாகதள்ளி
    வீழ்ந்தனஎன்ன வீழ்ந்த.

     இசையுடை அண்ணல்- புகழ்பெற்ற அனுமன்; சென்ற வேகத்தால்
-
பாய்ந்துபோன வேகத்தினாலே; எழுந்த குன்றும் - எழுந்து சென்ற
மலைகளும்; பசையுடை மரமும் - பிசினைப் பெற்ற மரங்களும்; மாவும் -
விலங்குகளும்; பல் உயிர்க் குலமும் - பல உயிர்த் தொகுதிகளும்; வல்லே
-
விரைவாக; திசையுறச் சென்று சென்று - அனுமன் சென்ற திக்கின்
வழியேபோய்ப் போய்; கடல்செறி இலங்கை சேரும் விசை இலவாக -
கடலால்சூழப் பெற்ற இலங்கையை அடையும் ஆற்றல் அற்றவையாய்; தள்ளி
வீழ்ந்தன என்ன -
தள்ளப்பட்டுக் கீழ் வீழ்ந்தாற்போல; வீழ்ந்த - கடலிலே
விழுந்தன.                                              (18)