4798. 

உரைத்தான்உரையால் 'இவன் ஊறு இலன்
     என்பதுஉன்னி
விரைத் தாமரை வாள்முகம் வி்ட்டு
    
விளங்க வீரன்
சிரித்தான்அளவே; சிறிது அத்திசை
     செல்லநோக்கி
வரைத்தாள்நெடும் பொற்குடுமித்தலை
     மாடு கண்டான்.

     வீரன் - வீரனானஅனுமான்; உரைத்தான் உரையால் - உபசார
வார்த்தைகளைக் கூறிய மைந்நாகமலையின் மொழியால்; இவன்ஊறு இலன்
என்பது உன்னி
- இவன் குற்றமற்றவன் என்பதை அறிந்து;  விரைத்
தாமரை வாள்முகம்
- மணமிக்க தாமரை போன்ற ஒளிமிக்க முகமானது;
விட்டு விளங்க - நன்றாக ஒளி வீசும்படி; அளவே சிரித்தான் - புன்னகை
செய்து; சிறிது அத்திசை செல்ல நோக்கி - மெல்ல மொழி வந்த திசையில்
நன்றாகப் பார்த்து; வரைத்தாள் நெடும் பொன் குடுமித்தலை - மூங்கில்
வளர்ந்த சாரலைப் பெற்ற மைந்நாகமலையின் நீண்ட பொன்மயமான
சிகரத்தை; மாடு கண்டான் - பக்கத்தில் பார்த்தான்.

     மைந்நாகமலையின்மொழியால் இவன் நல்லவன் என்பதை அறிந்த
அனுமான் புன்னகை செய்து நன்றாக நோக்கி மைநாக மலையின் சிகரத்தைப்
பார்த்தான். உன்னி - அறிந்து. இவ்வழி நோக்கும் என்பதை உன்னவர்
(ஆரண்ய - சூர்ப்ப - சூழ்ச்சி 8) விட்டு விளங்கல் நன்றாகப் பிரகாசிக்க
(சென்னை - பல் - கழக அகராதி) தாள் - சாரல்; தாள் உயர் தடங்கிரி (கம்ப
- 829).                                                (58)