5379.

' "ஈண்டு நான் இருந்து, இன் உயிர் மாயினும்,
மீண்டு வந்துபிறந்து, தன் மேனியைத்
தீண்டலாவது ஓர்தீவினை தீர் வரம்
வேண்டினாள்,தொழுது" என்று விளம்புவாய்.

     ஈண்டு - இந்தஇலங்கையில்; நான் இருந்து - (மீட்சி பெறாமல்) நான்
துன்பத்துடன் இருந்து; இன் உயர் மாயினும் - இனிய உயிர் இறந்தாலும்;
மீண்டு வந்து பிறந்து - மறுபடியும் உலகிற்கு வந்து பி்றந்து; தன் மேனியை
-
இராமபிரானுடைய திருமேனியை; தீண்டல் ஆவது - தழுவுதலாகிய; ஓர் -
ஒப்பற்ற; தீவினை தீர்வரம் - தீமையிலிருந்து நீங்கும் வரத்தை; தொழுது
வேண்டினாள் -
கைகூப்பி வேண்டிக் கொண்டாள்; என்று விளம்புவாய் -
என்று கூறுவாயாக.                    

     நின்மேனிஎன்னும் பாடம் இருந்தது போலும். வேண்டினேன் தொழுது
என்று அமைக்கலாம் போலும். இராமபிரானின் மேனியைத் தழுவுவது தீவினை
தீர்வரம் என்று பிராட்டி கருதினாள். தீவினை என்றது பெருமானைப்
பிரிந்திருத்தலை.                                             (35)