4810. அக்காலைஅரக்கியும் அண்டம்
     அனந்தமாகப்
புக்கால் நிறையாத புழைப் பெரு
     வாய் திறந்து
விக்காது விழுங்க நின்றாள், அது
     நோக்கிவீரன்
திக்கார்அவள்வாய் சிறிதாம்வகை
    சேணில்நீண்டான்.

     அக்காலை -
அவ்வாறுஅனுமன் கூறிய போதில்; அரக்கியும்
அண்டம் அனந்தமாக -
அரக்கியானவளும் அண்டங்கள் எல்லையறப்
பெருகி; புக்கால் - புகுந்தாலும்; நிறையாத புழைப்பெருவாய் திறந்து -
நிரம்பாத குகைபோன்ற பெரிய வாயைத் திறந்து; விக்காது விழுங்க நின்றாள்
-
விக்காமல்
 விழுங்குவதற்குஆயத்தமாக நின்றாள்; அது வீரன் நோக்கி -
அவள் செயலை அனுமன் பார்த்து; திக்கு ஆர் அவள் வாய் - திசைகளைப்
பொருந்திய அவளுடைய வாயானது; சிறிதாம் வகை - சிறிதாகும்படி;
சேணில் நீண்டான் - ஆகாயத்தில் படிப்படியாக வளர்ந்தான்.

     அரக்கியின்வாய் திசைகளின் எல்லையில் இருந்தது. அனுமன் பேருரு
வானையளாவி இருந்தது. புழை - குகை. மேருப் புழை என தொக்கு அடங்கித்
துயில்தரு கண்ணினான். (யுத்த - கும்ப 68) அரக்கியும் இதில் உள்ள உம் -
அசை புக்காலும் என்பதிலுள்ள உம்மை தொக்கு புக்கால் என வந்துள்ளது.
                                                        (70)